இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இப்போட்டியில் நீண்ட நாள்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ள பும்ரா, தவான் ஆகியோரின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
கடந்தப் போட்டியில் களமிறங்கயிருந்த அதே இந்திய அணியே இப்போட்டியிலும் களமிறங்கவுள்ளது. அதேபோல் இலங்கை அணியிலும் கடந்த போட்டியில் அறிவிக்கப்பட்ட அதே அணியே இந்த போட்டியிலும் விளையாடவுள்ளனர்.