நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இதையடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. இதில் பேட்டிங்கின்போது ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால், இந்திய பந்துவீச்சின்போது கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 164 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்குத் தொடக்கமே பயங்கரமாக அமைந்தது. 2ஆவது ஓவரில் கப்தில் 2 ரன்களிலும், மூன்றாவது ஓவரில் முன்ரோ 15 ரன்களிலும், நான்காவது ஓவரில் டாம் ப்ரூஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசி. அணி 17 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி பின்னர் இணைந்த டிம் செஃபெர்ட் - ராஸ் டெய்லர் இணை நிதானமான ஆட்டத்தை ஆடியது. இந்த இணையின் நிதான ஆட்டத்தால் நியூசி. 9 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தது. பின்னர் 10ஆவது ஓவரை வீசுவதற்கு இளம் வீரர் சிவம் தூபே அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரைப் பயன்படுத்திக்கொண்ட செஃபெர்ட் - டெய்லர் இணை 6, 6, 4, 1, 4 (நோ-பால்), 6, 6 என 34 ரன்களைச் சேர்த்தது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் நியூசி. அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்தது. இதனால் ஆட்டத்தில் நியூசி. அணி வெற்றிபெறுவதற்கு சாதகமான நிலை ஏற்பட்டது.
நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா இதையடுத்து அதிரடியாக ஆடிய டிம் செஃபெர்ட் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த அடுத்த பந்திலேயே சைனி பந்தில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பும்ரா பந்தில் டேரில் மிட்சல் போல்டாகி வெளியேற, ஆட்டம் பரபரப்பானது.
தொடர்ந்து இந்திய வீரர்கள் சிக்கனமாக வீச, 16 ஓவர்களில் நியூசி. 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. பின்னர் தாகூர் வீசிய 17ஆவது ஓவரில் சாண்ட்னர் 6 ரன்களிலும், கூகளின் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க ஆட்டம் இந்தியாவின் கைகளுக்குள் வந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக ஆடிய ராஸ் டெய்லர் அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்தார்.
பின்னர் அவரும் 18ஆவது ஓவரில் கீப்பர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 140 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. தொடர்ந்து 19ஆவது ஓவரை வீசிய பும்ராவின் பந்தில் கேப்டன் சவுதி போல்டாகி ஆட்டமிழக்க, இறுதியாக கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடைசி ஓவரை வீச தாகூர் வந்தார். அதில் 2ஆவது, 4ஆவது பந்தில் சிக்சர் விளாச, நியூசி. 2 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அதில் 1 ரன் மட்டுமே எடுக்க இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதற்கு முன்னதாக வேறு எந்த அணியும் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வெல்லாத நிலையில், இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியதோடு, வரலாற்று வெற்றியையும் பதிவுசெய்தது.
இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய பும்ரா ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய கே.எல். ராகுல் தொடர்நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
வெற்றிக்கோப்பையுடன் இந்திய வீரர்கள் இதையும் படிங்க: சதம் விளாசிய விஹாரி.! இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்..!