12-வது உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள அணியை அறிவிக்க ஏப்ரல் 20-ஆம் தேதியே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள வீரர்கள் யார் என்பது ஏப்ரல் 20 அன்று தெரிந்துவிடும்.
உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் - எம்.எஸ்.கே.பிரசாத் நம்பிக்கை!
2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி நிச்சயம் வெல்லும் எனத் இந்திய தேர்வுக் குழு தலைவர் எம்.எச்.கே.பிரசாத் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பிரசாத்
இந்நிலையில் இந்தியத் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கடந்த ஒன்றரை வருடமாக உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்தில் கவனம் செலுத்தி வந்தோம். இந்திய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு வீரர்களையும் கூர்மையாக கவனித்து வந்துள்ளோம். நிச்சயம் சிறந்த அணியையே தேர்வு செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் உலகக்கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும்'எனத் தெரிவித்துள்ளார்.