இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் ரஹானே (81), ஜடேஜா (58) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 297 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.
விக்கெட் வீழ்த்திய மகிழச்சியில் இந்திய அணி வீரர்கள் இந்நிலையில் நேற்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 57 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணிக்கு லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் சுமாரான தொடக்கத்தை கொடுத்து மய்ங்க் அகர்வால் 16ரன்களில் ஆட்டமிழந்தார்.
அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி பின்னர் களமிறங்கிய பூஜாராவுடன் இணைந்த ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளித்தினார். ராகுல் 38 ரன்கள் குவித்திருந்த போது சேஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அவரைத் தொடர்ந்து, அடுத்த ஒவரிலிலேயே பூஜாராவும் நடையைக் கட்ட 81 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.
ரஹானே அடித்த அட்டகாசமான ஷாட் இதையடுத்து இக்காட்டான நிலையில் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்த ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 67ஆவது ஓவரில் ரஹானே அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் ஆட்டத்தின் இரு இன்னங்கிஸிலும் அரைசதம் அடிப்பது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து இந்திய கேப்டன் விராட் கோலியும் தனது 21ஆவது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இந்நிலையில் ஆட்ட நேர முடிவில் இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.