ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் மறைந்தமுன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் மறைவிற்கு அஞ்சல் செலுத்தும்வகையில் இருநாட்டு வீரர்களும் கையில் கறுப்புப் பட்டை அணிந்தபடி, போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.