தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

30 ஓவர்களில் நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்திய இந்திய ஏ

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

india-a-won-by-5-wkts-against-new-zealand-a
india-a-won-by-5-wkts-against-new-zealand-a

By

Published : Jan 22, 2020, 1:07 PM IST

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, நியூசிலாந்து ஏ அணியுடன் மூன்று அதிகாரப்பூர்வற்ற ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் நியூசிலாந்து ஏ அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இதில் தொடக்க வீரர் ரவீந்திரா 49 ரன்களும் கேப்டன் டாம் ப்ரூஸ் 47 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாம் ப்லெண்டல் 16 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக நியூசிலாந்து ஏ அணி 48.3 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹமத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 231 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணியின் தொடக்கமே அதிரடியாக அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில், இளம் வீரர் ப்ரித்வி ஷா 48 ரன்களிலும், மயாங்க் அகர்வால் 29 ரன்களிலும் வெளியேறினர்.

பின்னர் வந்த கேப்டன் சுப்மன் கில் நிதானமாக 30 ரன்களும், சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 161 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் விஜய் சங்கர் - குருணால் பாண்டியா இணை விக்கெட்டுகள் இழக்காமல் இறுதிவரை நின்று இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியாக இந்திய அணி 29.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதையும் படிங்க: ஒரே போஸ்ட்..! ஆல் ஓவர் இந்தியாவும் சப்போர்ட் பன்னுதே..!

ABOUT THE AUTHOR

...view details