இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன.
இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இந்த போட்டியில் ரோஹித் சர்மா, சர்வதேச டி20 அரங்கில் தனது 19ஆவது அரைசத்தை கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ராகுலும் அரைசதமடித்து அசத்தினார்,
அதன்பின் 34 பந்துகளில் 71 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மா, வில்லியம்சிடம் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.