இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி நாளை புனேவில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் இந்திய வீரர்களில் அதிக டி20 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா முதலிடம் பிடிப்பார்.
இந்தப் பட்டியலில் பும்ரா, அஷ்வின், சாஹல் ஆகியோர் 52 விக்கெட்டுகள் வீழ்த்தி மூன்று பேரும் முதலிடத்தில் உள்ளனர். இதுவரை அஷ்வின் 46 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளையும், சாஹல் 36 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளையும், பும்ரா 44 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.