இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 05ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகாக இருநாட்டு வீரர்களும் கடந்த ஜனவரி 27ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது எளிதல்ல என்றும், ஏனெனில் அவரிடம் எந்த பலவீனமும் இல்லை என்றும் இங்கிலாந்து அணி ஆல்ரவுண்டர் மோயீன் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மோயீன் அலி, "விராட் கோலியை எப்படி 'அவுட்'டாக்குவது? என்ற கேள்விக்கான விடை ‘தெரியாது’. அவர் உண்மையில் ஒரு அற்புதமான உலகத்தரம் வாய்ந்த வீரர். தற்போது தந்தையாகியுள்ள விராட் கோலி, மீண்டும் எங்கள் அணியுடன் மோதி சர்வதேச போட்டிக்கு திரும்புகிறார். அதனால் அவரது திறனும் ஆற்றலும் மேலும் அதிகரித்திருக்கும் என்று நம்புகிறேன்.