தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய பும்ராவிற்கு திருமணம்? - நான்காவது டெஸ்ட் போட்டி

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ind vs Eng: Bumrah has taken leave to prepare for marriage
Ind vs Eng: Bumrah has taken leave to prepare for marriage

By

Published : Mar 3, 2021, 6:43 AM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியிலிருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகினார்.

அதேபோல் இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்தும் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பும்ரா திருமணம் செய்துகொள்ள போவதால்தான் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், “ஜஸ்பிரித் பும்ரா திருமணம் செய்யயுள்ளார். இதனால் அவர் விடுப்பு எடுத்துள்ளார்” என்றார். கடந்த சில ஆண்டுகளாக மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரனும் ஜஸ்பிரித் பும்ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின. இதனிடையே பும்ராவுக்கு தற்போது திருமணம் என வெளியாகியுள்ள தகவலினால் பும்ராவின் ஜோடி யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: அகமதாபாத் மைதானத்தை கேலி செய்யும் மைக்கேல் வாகன்!

ABOUT THE AUTHOR

...view details