சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.13) ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை குவித்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 161 ரன்களையும், துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே 67 ரன்களையும் எடுத்திருந்தனர். இதையடுத்து ரிஷப் பந்த் 33 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 5 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கினர்.
இன்றைய ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே அக்சர் பட்டேல் 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா ரன் ஏதுமின்றியும் மோயீன் அலி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கிய ரிஷப் பந்த், மைதானத்தில் சிக்கசர்களைப் பறக்கவிட்டு அரைசதத்தைக் கடந்தார்.