தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல் டெஸ்ட் டாஸ் வென்ற வங்கதேசம் - முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Ind vs Ban 1st Test toss

By

Published : Nov 14, 2019, 9:30 AM IST

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. சமீபத்தில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நிறைவுபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் த்ரில்லாக கைப்பற்றியது.

இதனிடையே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று இந்தூரில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இன்றைய டெஸ்ட் போட்டியின்மூலம் அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

அவர் தவிர ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா என இந்திய அணியின் பேட்டிங் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதே சமயத்தில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அந்த அணி புதிய கேப்டன் மொமினுல் ஹாக்கின் தலைமையில் களமிறங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details