தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 15, 2020, 9:03 PM IST

ETV Bharat / sports

தலையில் தாக்கிய பவுன்சர்; காயத்தால் விலகிய ரிஷப் பந்த்!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ind-vs-aus-rishabh-pant-ruled-out-of-2nd-odi-due-to-concussion
ind-vs-aus-rishabh-pant-ruled-out-of-2nd-odi-due-to-concussion

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் பேட்டிங் செய்தபோது, பட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கின்போது கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

இந்நிலையில் இரண்டாவது போட்டிக்காக இந்திய அணி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சென்றது. ஆனால் அணியுடன் ரிஷப் பந்த் செல்லாமல், சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமிக்கு சென்றிருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மூன்றாவது போட்டியில் ரிஷப் பந்த் களமிறங்குவது குறித்து சிகிச்சைக்கு பின் தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த் இல்லாததால் மாற்று வீரர் அறிவிக்கப்படாமல், அவரது இடத்தில் மணிஷ் பாண்டே களமிறங்குவார் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விராட் கோலியின் படத்தை தலையில் பதித்த ரசிகர்

ABOUT THE AUTHOR

...view details