தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோப்பையை வெல்லப்போவது யார்: இந்தியா - ஆஸி. பலப்பரீட்சை - விராட் கோலி

பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ind-vs-aus-india-take-on-australia-in-series-decider-at-chinnaswamy
ind-vs-aus-india-take-on-australia-in-series-decider-at-chinnaswamy

By

Published : Jan 19, 2020, 9:07 AM IST

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்றன. இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், தொடரைக் கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஷிகர் தவான் - ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டாவது போட்டியில் தவான் ஃபீல்டிங்கின்போது ஒரு ஓவர் கூட மைதானத்திற்குள் வரவில்லை. ரோஹித் சர்மாவுக்கு ஃபீல்டிங்கின்போது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் இன்று களமிறங்குவார்களா என்ற சந்தேகம் உள்ளது.

ரோஹித் - தவான்

விராட் கோலி ஃபார்மில் இருந்தாலும், நான்காவது இடத்தில் களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்மின்றி தவிப்பது இந்திய அணி பேட்டிங் வரிசைக்கு வலுவைக் குறைக்கிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முதல் போட்டியில் சறுக்கினாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. காயத்திற்குப் பின் அணிக்குத் திரும்பிய பும்ரா அபாரமாக பந்துவீசி தனது ஃபார்மிற்கு வந்தார். பெங்களூரு மைதானம் என்பதால் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் இன்றைய போட்டியில் ஆடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ராகுல்

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் அதீத பலத்துடன் உள்ளது. வார்னர், ஃபிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், லபுசானே, அலெக்ஸ் கேரி ஆகியோர் அபாரமாக செயல்பட்டுவருகின்றனர். நடுவரிசையில் ஹேண்ட்ஸ்கோம் இணைந்தால் இந்திய அணி பந்துவீச்சை எளிதாக சமாளிக்கலாம். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை சரியான இடைவேளையில் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்றால், போட்டி ஆஸ்திரேலிய அணியின் கைவிட்டு சென்றுவிடும். ஸ்டார்க், ரிச்சர்ட்சன், ஸாம்பா ஆகியோர் சிக்கனமாக வீசினால் மட்டுமே இந்திய அணியின் வெற்றியைத் தடுக்க முடியும்.

ஆரோன் ஃபிஞ்ச்

பெங்களூரு மைதானம் என்பதால் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இரு அணிகளில் வெற்றிபெறும் அணிக்கு கோப்பை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸாம்பா சுழலில் சிக்குகிறாரா கோலி?

ABOUT THE AUTHOR

...view details