இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 54 ரன்கள் முன்னிலையில் இன்று (ஜன.18)நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த மார்கஸ் ஹாரிஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து டேவிட் வார்னரும் 48 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - லபுசாக்னே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லபுசாக்னே 25 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார்.
பின்னர் 55 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித்தும் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து வந்த காமரூன் கிரீன், கேப்டன் டிம் பெய்ன் ஆகியோரும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்.
பின்னர் 66.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால், நான்காம் நாள் தேநீர் இடைவேளை முன்கூட்டியே எடுக்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்ளை இழந்து 243 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் கம்மின்ஸ் 2 ரன்களுடனும், ஸ்டார்க் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையும் படிங்க: பன்டஸ்லீகா: முல்லரின் சாதனையை முறியடித்த லெவாண்டோவ்ஸ்கி!