பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று (ஜன.15) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கம் தந்தது. இதில் இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் மறுமுனையில் நிதானமாக விளையாடிய மார்கஸ் ஹாரிஸ், ஐந்து ரன்கள் எடுத்திருந்தபோது இந்த இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ரன்களுக்குள்ளாகவே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.