தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

3ஆவது டெஸ்ட்: மழைக் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம்! - டேவிட் வார்னர்

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மழைக்காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

IND vs AUS, 3rd Test: Siraj dismisses Warner, rain curtails first session
IND vs AUS, 3rd Test: Siraj dismisses Warner, rain curtails first session

By

Published : Jan 7, 2021, 8:38 AM IST

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று(ஜனவரி 7) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி காயத்திலிருந்து மீண்ட டேவிட் வார்னர் - வில் புகோவ்ஸ்கி இணை ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸிற்கு தொடக்கம் தந்தது. இதில் ஐந்து ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர் முகமது சிராஜின் பந்துவீச்சில் ஸ்லீப்பில் இருந்த புஜாராவிடம் கேட்ச் கோடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் மார்னஸ் லபுசாக்னே - புகோவ்ஸ்கியுடன் இணை தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் 7.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் திடீரென மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 21 ரன்களை எடுத்துள்ளது.

அந்த அணியில் வில் புகோவ்ஸ்கி 14 ரன்களுடனும், லபுசாக்னே 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து மழை நீடித்து வருவதால், முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: 3ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்

ABOUT THE AUTHOR

...view details