தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஓப்பனிங் இறங்கிய சஞ்சு... மிடில் ஆர்டரில் நியாயம் சேர்த்த மனீஷ்: நியூசி.க்கு  166 ரன்கள் இலக்கு! - மனீஷ் பாண்டே

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 166 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ind-sets-a-target-of-165-for-nz
ind-sets-a-target-of-165-for-nz

By

Published : Jan 31, 2020, 2:25 PM IST

Updated : Jan 31, 2020, 3:00 PM IST

இந்தியா - நியூசிலாந்து அணிகள் வெலிங்டனில் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே 3-0 என்று தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதையடுத்து டேரில் மிட்சல் இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.

பின்னர் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - கே.எல். ராகுல் களமிறங்கினர். நீண்ட நாள்களுக்குப் பின் அணியில் இடம்கிடைத்துள்ளதால் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து வந்த கேப்டன் கோலி 11 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

11 ரன்களில் வெளியேறிய கோலி

விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒரு முனையில் தொடர்ந்து அதிரடியாக ரன் சேர்த்த கே.எல். ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி திணறியது. இதனையடுத்து சிவம் தூபே - மனீஷ் பாண்டே இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தது. தூபே 12 ரன்களில் வெளியேற, வாஷிங்டன் சுந்தர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் சென்றனர். இதனால் 88 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்தது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசி.,

பின்னர் ஷர்துல் தாகூர் - மனீஷ் இணை இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. மனீஷ் பாண்டே கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்பதால் ஷர்துல் அதிரடியாக ஆடி 20 ரன்களில் வெளியேறினார்.

கடைசி நேரத்தில் மனீஷ் பாண்டே அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்ளை இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய மனீஷ் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதையும் படிங்க: ஜோகோவிச்சால் முடிவுக்கு வந்த ஃபெடரரின் ஆஸ்திரேலியன் ஓபன் கனவு!

Last Updated : Jan 31, 2020, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details