இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி கிரிக்கெட் வீரர்களும் நேற்று (ஜன.27) சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனல் வாயிலாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பரத் அருணுடன் நேர்காணல் நடத்தினார்.
அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து பேசிய பரத் அருண், “ரவி சாஸ்திரி டிரஸ்ஸிங் ரூமிலிருந்து போட்டியை உன்னிப்பாக கவனிப்பார். அப்போது இந்திய பந்துவீச்சாளர்களில் யாரேனும் ஒரு ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விட்டால், அவர் உடனடியாக என்னை திட்டுவதற்கு ஆயத்தமாகிவிடுவார். அவரை பொறுத்தவரை நாங்கள் பந்துவீசும் போது ரன்களை குறைத்து, விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். ஏனெனில் பந்துவீச்சாளர்கள் பவுண்டரிகள் கொடுப்பதை அவர் முற்றிலும் வெறுக்கிறார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:Ind vs Eng: சென்னையில் விராட் கோலி; வீரர்களுக்கு தொற்று இல்லை!