2020ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை ஸ்காட்லந்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதில் ’குருப் ஏ’ மற்றும் ’குருப் பி’ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் வீதம் 8 அணிகள் ’நாக் அவுட்’ முறையில் போட்டியிடவுள்ளன.