ஜன.17ஆம் தேதி தொடங்கிய யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது. இதில் வலிமையான இந்திய அணியை எதிர்த்து வங்கதேச அணி ஆடவுள்ளது.
இந்தப் போட்டியில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள வங்கதேச் அணியை வீழ்த்தி இந்திய அணி 5ஆவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் அதிக ரன்கள் குவித்து அபாரமான ஃபார்மில் இருக்கும் யஷஸ்வி ஜெய்ஷ்வால், திவ்யன்ஷ் சக்சேனா, திலக், கேப்டன் ப்ரியன் கார்க், துருவ், சித்தேஷ், அதர்வா என பேட்டிங் ஆர்டர் அசுர பலத்துடன் உள்ளது.
ஆனாலும் வங்கதேச பந்துவீச்சாளர்களை குறைத்து மதிப்பிடாமல் ஆடவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சிலும் கார்த்திக் தியாகியின் யார்க்கருக்கு பதிலளிக்க முடியாமல் அனைத்து வீரர்களும் திணறி வருகின்றனர்.
அவருக்கு உறுதியாக சுஷந்த் மிஸ்ரா, ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங் என திறமையான பந்துவீச்சாளர்களுடன் இருப்பதால் ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.