தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட்: மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ள ஐசிசி!

இந்தூர்: டெஸ்ட் போட்டிகளின் நாள்களைக் குறைக்கும் நடைமுறைக்கு பல்வேறு வீரர்களும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வரும் மார்ச் மாதம் மீண்டும் நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

icc-to-discuss-four-day-test-proposal-despite-vehement-criticism
icc-to-discuss-four-day-test-proposal-despite-vehement-criticism

By

Published : Jan 6, 2020, 10:51 PM IST

2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் டெஸ்ட் போட்டிகளின் நாள்களை நான்காகக் குறைப்பதற்கு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல் வெளியானதிலிருந்து விராட் கோலி, சச்சின், பாண்டிங், லயன் என பல்வேறு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கிரிக்கெட் கமிட்டி தலைவர் கும்ப்ளே பேசுகையில், நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் குறித்து எனது கருத்தை நான் கூற முடியாது. ஏனென்றால் நானும் கமிட்டியில் இருக்கிறேன். என்னைத் தவிர ஸ்ட்ராஸ், ராகுல் டிராவிட், ஜெயவர்தனே, ஷான் பொல்லாக் ஆகியோரும் அந்த கமிட்டியில் இருக்கின்றனர். இந்த நான்கு நாள் டெஸ்ட் போட்டி குறித்து மார்ச் மாதம் துபாயில் நடக்கவுள்ள ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

ஐசிசி வெளியிட்ட நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான திட்டம் பல்வேறு வீரர்களிடம் எதிர்ப்பை பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அனைவரின் காதுகளும் கங்குலியை எதிர்நோக்கின. ஆனால் அவர், ‘மிகவும் வேகமாக நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசுகிறோம் என நினைக்கிறேன்’ என்றார்.

இதையும் படிங்க: நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் எப்படி இருக்கும்: ஒரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details