டிசம்பர் 26ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்-நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா-இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பாகிஸ்தான் அணிக்கெதிராக சதமடித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 890 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அதேசமயம் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 877 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டார்.
இப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 879 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார். மேலும் இந்திய அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே ஐந்து இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.