தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு : கோலி தொடர்ந்து முதலிடம் - துபாய்

துபாய் : ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  மீண்டும் தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ICC Test Rankings: Kohli retains top spot, Rahane moves upward
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

By

Published : Jan 24, 2020, 10:18 PM IST

சமீபத்தில் வெளியாகியுள்ள ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே முந்தைய தனது இடத்திலிருந்து முன்னேறி பட்டியலில் 8 ஆவது இடத்தை உறுதி செய்துள்ளார்.


ஐ.சி.சி டெஸ்ட் புது தரவரிசை பட்டியல், அண்மையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் முன்னேறி இங்கிலாந்து அணி வென்ற போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் புள்ளியையும் கணக்கில் கொண்டுள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பென் ஸ்டோக்ஸ், அந்த ஆட்டத்தில் 120 ரன் எடுத்த பிறகு தரவரிசைப் பட்டியலில் தொழில் முறை ஆட்டக்காரராக ஆல்-ரவுண்டர் பிரிவில் சிறந்த இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இருந்து முன்னேறி தற்போது பேட்ஸ்மேன்களில் 10 ஆவது இடத்தையும், பந்து வீச்சாளர்களில் 29 ஆவது இடத்தையும் கைப்பற்றி இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

அந்த போட்டியில், முதல் இன்னிங்சில் ஆஃப்-ஸ்பின்னர் டொமினிக் பெஸின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியபோது தரவரிசையில் 49 இடங்கள் முன்னேறி 62 ஆவது இடத்தையும், அதே நேரத்தில் குர்ரான், ஜாக் லீச் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முறையே தலா ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 200 ரன் எடுத்தபோது, 24 ஆவது இடத்திலிருந்து முன்னேறி 16 ஆவது இடத்தை எட்டியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து, தரவரிசையில் மூன்றாவது இடத்தை இலங்கை முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் பிடித்த, அதே நேரத்தில் ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்களில் முதல் 10 பேரிலும் அவர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : ’நானும் இந்திய மருமகன் தாண்டா’ கெத்துக்காட்டிய மேக்ஸி..!

ABOUT THE AUTHOR

...view details