இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலானிய ட்ரம்ப் ஆகியோர், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், இந்தியாவை அமெரிக்கா நேசித்து மதிக்கிறது. இந்திய மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் நம்பிக்கைக்குரிய நாடாக இருக்கும்.
டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கால்பந்து மைதானத்தில் மோடியை வரவேற்றோம். உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் எங்களை இந்தியா வரவேற்றுள்ளது. தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றவர்களின் சாதனைகளை கொண்டாடும் மக்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது என்று புகழ்ந்து பேசினார்.