கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை ஆறரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவரும், தனது ஓய்வுக்குப் பின் ஹரியானா மாநிலத்தின் காவல் துணை கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்துவருபவருமான ஜோகிந்தர் சர்மா,தற்போது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
ஜோகிந்தர் சர்மாவை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளது. அதில், “2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் நாயகன், 2020இல் உண்மையான உலக நாயகன்.