தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 28, 2020, 2:58 PM IST

Updated : Dec 28, 2020, 6:23 PM IST

ETV Bharat / sports

சிறந்த வீரருக்கான விருது கோலிக்கு, 'ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' தோனிக்கு!

ஐசிசியின் ’ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ விருதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், தசாப்தத்தின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் வென்றுள்ளனர்.

ICC decade award winners list
ICC decade award winners list

கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரரைத் தேர்வுசெய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்விருது வழங்குவது வழக்கம். அதன்படி 2011-20ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்குப் பரிந்துரைசெய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஐசிசி கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த விளங்கிய வீரர், வீராங்கனைகளை ஐசிசி இன்று (டிச.28) அறிவித்தது. அதன்படி இந்த பத்து ஆண்டுகளின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்டது.

இதன்படி, ஐசிசியின் பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய வீரருக்கான விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வென்றுள்ளார். மேலும், பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய ஒருநாள் வீரருக்கான விருதும் விராட் கோலிக்கு வழங்க்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பத்தாண்டுகளில் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் டெஸ்ட் அணி வீரராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய அணியின் எல்லிஸ் பெர்ரி, கடந்த பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய ஒருநாள் மற்றும் டி20 அணி வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : டிஆர்எஸ் குழப்பம் குறித்து மறுபரிசீலனை செய்யக்கோரி ஐசிசிக்கு சச்சின் கோரிக்கை!

Last Updated : Dec 28, 2020, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details