தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

’பெங்களூருவை விட்டு வெளியேறமாட்டேன்' - கோலி பிடிவாதம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒருபோதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட்டு வெளியேறமாட்டேன் என்றும், நிச்சயம் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

I will never leave RCB: Virat Kohli
I will never leave RCB: Virat Kohli

By

Published : Apr 26, 2020, 11:45 AM IST

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோவிட்-19 பெருந்தொற்றினால் இந்தியாவில் இம்மாதம் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ் இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்ச்சியில் இணைந்தார். இருவரும் தங்களது ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான அனுபவங்கள் குறித்து ரசிகர்களிடையே மனம் திறந்து பேசினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி

அப்போது விராட் கோலி,12 வருடங்களாக பெங்களூரு அணியில் நான் விளையாடிவருகிறேன். ஒருமுறை கூட எனக்கு இந்த அணியை விட்டு செல்லவெண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. இனி வருங்காலங்களிலும் ஒருபோதும் நான் இந்த அணியை விட்டு செல்லமாட்டேன். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பதே என்னுடைய கடமையாகும் என்று தெரிவித்தார்.

விராட் கோலி

2008ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் கோலி, இதுவரை 177 போட்டிகளில் பங்கேற்று ஐந்து சதங்கள், 36 அரைசதங்களுடன் 5,412 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதையும் படிங்க:ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் பிசிசிஐயின் பதிலும்!

ABOUT THE AUTHOR

...view details