எந்த ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கும் ஹாட்ரிக் என்பது கனவாக இருக்காது. ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும், பத்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதைத் தான் கனவாக காண்போம் எனத் இந்தியாவுக்காக முதல் ஹாட்ரிக்கை எடுத்த சேட்டன் சர்மா தெரிவிக்கிறார்.
1983ல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபின், அடுத்த உலகக்கோப்பையை(1987) இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நடத்துகின்றனர். அப்போதும் இந்திய கிரிக்கெட்டின் காட் ஃபாதர் (God Father of Indian Cricket) கபில் தேவ் தான் கேப்டன். இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முந்தைய போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது.
சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை என்பதால் இந்திய அணி இரண்டாவது முறையாக கைப்பற்றும் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
வகையில் இருந்தது. அணியில் ஸ்ரீகாந்த், கவாஸ்கர், அஸாருதீன், சித்து, கபில் தேவ், ரவி சாஸ்திரி என மிரட்டலாக அமைந்திருந்த உலகக்கோப்பை.
சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை என்பதால் இந்திய அணி இரண்டாவது முறையாக கைப்பற்றும் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
நாக்பூர் விதர்பா மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. நியூசிலாந்து அணியினர் நிதானமாக ரன்கள் எடுத்த நிலையில், 181 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்து வந்தனர்.
அப்போது, கேப்டன் கபில் தேவ் சேட்டன் சர்மாவை பந்துவீச அழைத்தார். அந்த ஓவரை வீச வருகையில் சேடன் சர்மாவுக்கு தெரியாது. உலகக்கோப்பையின் முதல் ஹாட்ரிக்கை எடுக்கப் போகிறோம் என...
பெரிய உடற்கட்டை வைத்திருக்காத வேகப்பந்துவீச்சாளர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவுக்காக ஆடி வருபவர். 1985-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியவர் என்னும் பெயரோடு உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விளையாடி வருபவர் என்ற அறிமுகத்தோடு ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார்.
அந்த ஓவரை முதலாவதாக கென் ரூதர்ஃபீல்டு எதிர்கொண்டு போல்டாக, தொடர்ந்து வந்த ஸ்மித்-ம் போல்டாக ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த விக்கெட்டுக்கு சாட்ஃபீல்டு களமிறங்கிறார்.
அப்போது, கபில் தேவ் வந்து சேடன் சர்மாவிடம் பேசுகிறார். 'சாட்ஃபீல்டு பயந்திருக்கிறான். போல்டை நோக்கி நேராக வீசு' என ஆலோசனைக் கூற, அதனை கச்சிதமாக சேட்டன் சர்மா செயல்படுத்த, காலின் நடுவே சென்ற பந்து, போல்டை தட்ட; உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஹாட்ரிக் என்ற வரலாறு படைத்தார் சேட்டன் சர்மா.
பின்னர் 222 ரன் இலக்குடன் ஆடிய இந்திய அணியில், ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர் மற்றும் அஸாரூதின் ஆகியோர் அதிரடியான விளையாடினர். இதனால், இந்திய அணி 32.1 ஓவர்களிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிபெற்றது.
தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் 58 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 75 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில், சுனில் கவாஸ்கர் 88 பந்துகளில் 10 பவுண்டரி, 3சிக்சர்கள் என 103 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாவது வீரராக வந்த அஸாரூதின் 5 பவுண்டரிகள் உட்பட 41 ரன்களுடன் அவுட் ஆகாமல் இறுதிவரை களத்தில் நின்றார்.
அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதை இன்றளவும் யாராலும் மறந்திடாத முடியாது.
உலகக்கோப்பையின் முதல் ஹாட்ரிக்கை எடுத்த மகிழ்ச்சியில் நான் பாதி கிருக்கனாக மாறிவிட்டேன் என, சேட்டன் ஷர்மா தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.