தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெஸ்ட் அணிக்கு திரும்பும் நம்பிக்கை உள்ளது - ஷிகர் தவான்! - ஷிகர் தவான்

இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஷிகர் தவான், தான் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளதென தெரிவித்துள்ளார்.

I have not given up hope on Test comeback, says Shikhar Dhawan
I have not given up hope on Test comeback, says Shikhar Dhawan

By

Published : Sep 7, 2020, 2:45 PM IST

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்தும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவது குறித்தும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஷிகர் தவான், 'நான் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காததால், எனது நம்பிக்கை குறையவில்லை. நிச்சயம் நான் டெஸ்ட் அணிக்கு திரும்புவேன். கடந்தாண்டு ரஞ்சி தொடரின் போது எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நான், ஒருநாள் அணியில் இடம்பிடித்தேன். அதுபோலவே எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன்.

அதேசமயம் நான் என் முழுத்திறனையும் வெளிப்படுத்தி வருகிறேன். இருப்பினும் அடித்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் இடம்பிடிக்க நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அதனால் நான் தொடர்ந்து ரன்களை குவிப்பதில் என் முழுகவனத்தையும் செலுத்தி வருகிறேன்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:அடுத்த விக்கெட்டை இழக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

ABOUT THE AUTHOR

...view details