உலக கிரிக்கெட் அரங்கின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ்கெய்ல் இந்திய அணியுடன் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக வெளியான தகவலினால் அவரின் ரசிகர்கள் கவலையடைந்தனர். அவர் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசினார்.
அரைசதம் அடித்த மகிழ்சியில் கெய்ல் பிறகு போட்டி முடிந்தவுடன் கிறிஸ்கெய்லிடம் செய்தியாளர் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது பற்றி கேள்வி எழுப்பிய போது, ’நான் எந்த அறிவிப்பையையும் வெளியிடவில்லையே’ என ஓபனாக அறிவித்தார்.
பின் அதைத்தொடர்ந்து விடாது தொடர்ந்த செய்தியாளர், ”நீங்கள் அப்படியென்றால் மீண்டும் தொடர போகிறீர்களா?” என கேட்டதற்கு, ” அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்’ என கூறிவுள்ளார்.
செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பும் காணொலியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது அந்த காணொலி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.
இதற்கு முன் கெய்ல் உலகக்கோப்பை தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்திய அணியுடனான ஒரு நாள் போட்டி அணியில் இடம் பெற்று, விளையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.