ஐபிஎல் தொடர்கள் மார்ச் 23-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், எல்லா அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வருடம் டெல்லி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்றுள்ளார்.
'டெல்லி கேப்பிடல்ஸ் அணி கோப்பையை வெல்லும்' - பாண்டிங் நம்பிக்கை! - worldcup 2019
டெல்லி : "2019-ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிச்சயம் கைப்பற்றும்" என்று, அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரிக்கி பாண்டிங் கூறுகையில், இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி கைப்பற்றும். ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக ஐபிஎல் தொடருக்கு பின்னரே ஆஸ்திரேலிய அணியில் இணைய உள்ளேன். உலகக்கோப்பை ஆஸ்திரேலியத் தொடரில், உஸ்மான் கவாஜா இடம்பெறவில்லை என்றால் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்.
ஸ்மித், வார்னர் இருவரும் உலகக்கோப்பைக்கு முன்னர் தஙகளை நிரூபிக்க வேண்டும். உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.