உலகக் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட், ஒருநாள், டி20 போன்று மற்றுமொரு வடிவமாக நடத்தபட்டு வரும் டி10 போட்டியின் மூன்றாவது சீசன் நவம்பர் 15ஆம் தேதி முதல் 24 வரை அபுதாபியிலுள்ள சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
புதிய வடிவ கிரிக்கெட்டில் விளையாடவுள்ள ஹீரோக்கள்! - icc
அபுதாபி: உலக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் டி10 லீக்கிற்கான தேதி, மைதானங்கள் மற்றும் வீரர்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்போட்டிகளில் இயன் மோர்கன், ஷோயப் மாலிக், டேரன் சமி, ஏஞ்சலோ மேத்யூஸ், லசித் மலிங்கா, ஷேன் வாட்சன் மற்றும் கேமரூன் வைட், முகமது ஷாஜாத், ஆண்ட்ரே ரஸ்ஸல், கீரோன் பொல்லார்ட் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் பங்கெற்கவுள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் கூறுகையில், ”இந்த டி10 போட்டியானது எதிர்கால தலைமுறையினருக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். இவ்வடிவிலான கிரிக்கெட் தொடரில் அனைத்து விதமான வீரர்களையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் நம்மால் அங்கு காண இயலும்” என கூறிவுள்ளார்.