தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"இவர்தான் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்" - ஆஸ்திரேலிய கேப்டன் ! - ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

Tim Paine on Pat Cummins
Tim Paine on Pat Cummins

By

Published : Dec 25, 2019, 3:20 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

பேட் கம்மின்ஸ்

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிப்பது குறித்து அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் செய்தியாளர்களிடையே கூறியதாவது,

கம்மின்ஸ்தான் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சமீப காலமாக அவரின் புள்ளி விவரங்கள் அதை உறுதிபடுத்துகின்றன. அவரது அனைத்து ஆட்டங்களிலும் அது வெளிப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் அவர், கம்மின்ஸ் தன்னுடைய அனுபவத்தால் இந்த இடத்தை அடைத்திருக்கிறார் என நான் கருதுகிறேன். எந்த சூழ்நிலைகளிலும் அவரது பந்துவீசும் வேகம் 140 கிமீ தாண்டிதான் இருக்கிறது. அது அவரின் தனிப்பட்ட திறமையை இந்த உலகிற்கு எடுத்துக்கூறுகிறது என பெய்ன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பேட் கம்மின்ஸ் கடந்த வாரம் நடைபெற்ற 13ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏழத்தில் ரூ.15.5 கோடிக்கு கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன்மூலம் இவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது நபர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சச்சின், ஸ்டீவ் வாக் வரிசையில் இணையவுள்ள ஆண்டர்சன்..! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details