தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

’எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்’ ட்விட்டரை தெறிக்க விட்ட ஹர்பஜன் சிங்! - chahar

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்த தீபக் சஹாரை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தமிழிலில் பாராட்டியுள்ளார்.

harbhajan singh

By

Published : Aug 7, 2019, 9:42 AM IST

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சஹார் மூன்று ஓவர்களில் 4 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதனை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் செல்ல பிள்ளையுமான ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் தீபக் சஹாருக்கு, தமிழில் வாழ்த்துமழை பொலிந்துள்ளார்.

அதில், ”நம்ம பய தீபக் சஹர் இருக்கானே செம திறமைசாலி, புது பால் கையில கொடுதுட்டா போதும் சின்ராச கைலயே பிடிக்க முடியாது. ஸ்டிக் தெறிக்கும் பந்து சும்மா ஸ்விங் ஆகுற அழகே தனி, சென்னை அணியின் சொத்து இப்பொ பிசிசிஐ ஓட பெருமை, சிஸ்கே புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்” என தமிழில் ட்வீட் செய்து பாராட்டியுள்ளார்.

பஞ்சாபியை தாய் மொழியாக கொண்ட ஹர்பஜன் சிங், ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவ்வபோது தமிழ் ரசிகர்களுக்கு தமிழில் பேசி வியக்க வைப்பார்.

தற்போது சக ஐபிஎல் அணி வீரரான தீபக் சஹாரை பாராட்டி தமிழில் ட்வீட் செய்திருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details