இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ’தமிழ் புலவர்’ என அழைக்கப்படுபவருமான ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று திருநெல்வேலியில் திருடர்களுடன் வீரமாக போராடிய முதியவர்களின் வீடியோவை பதிவிட்டு தமிழில் ட்வீட் செய்துள்லார்
வைரலாகும் 'தமிழ் புலவர்' ஹர்பஜனின் ட்வீட்! - indian team
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
harbhajan singh
அவரது ட்வீட்டில் ‘திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பார்த்தா அல்லு விடும். என்ன வீரம், பாசத்துக்கு முன்னாடி நான் பனி, பகைக்கு முன்னாடி நான் புலினு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்டபார்வை’ என தமிழில் பதிவிட்டு அந்த குற்றச் சம்பவத்தின் காணோலியை பதிவிட்டுள்ளார்..