2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை அணி வீரர்கள் பலரும் இப்போதே சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியின் கேப்டன் 'தல' தோனி பயிற்சியில் ஈடுபடுவதால், ஒவ்வொரு நாளும் மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
இதனிடையே ட்விட்டர் புகழ் 'ஹர்பஜன் சிங்' சென்னை அணியுடன் இணைந்துள்ளார். ஹர்பஜன் சிங்கைப் பொறுத்தவரையில் களத்தில் கலக்குகிறாரோ இல்லையோ ட்விட்டரில் தனது ஸ்டையில் அசத்தி வருகிறார்.