தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனாவிலிருந்து மீண்ட 101 வயது மூதாட்டி: அஸ்வின் போட்ட ட்வீட் - கரோனாவிலிருந்து மீண்ட 101 வயது மூதாட்டி

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து இத்தாலியைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி மீண்டது மனித இனத்திற்கு ஊக்கத்தை தருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட் செய்துள்ளார்.

Great boost to human race: Ashwin on 101-year-old corona survivor
Great boost to human race: Ashwin on 101-year-old corona survivor

By

Published : Mar 28, 2020, 8:14 AM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இதன் தாக்கம் ஐரோப்பா கண்டங்களில் அதிகம் உள்ளன. அதிலும் இத்தாலியில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை அந்த நாட்டில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 101 வயது மூதாட்டி சிகிச்சை பெற்று மீண்டுவந்தார். கரோனாவால் இத்தாலியில் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், 101 வயது மூதாட்டி மீண்டுவந்த சம்பவம் ஊக்கத்தை அளித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், மனித இனத்திற்கு இச்செய்தி ஊக்கமளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அஸ்வினுடன் தனிமைப்படுத்தப்பட விரும்புகிறேன்... ஜோஸ் பட்லர்!

ABOUT THE AUTHOR

...view details