தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மூன்று வருட காதல்... இந்தியன் ஸ்டைலில் நிச்சயதார்த்தம் செய்த ஆஸி., வீரர்! - கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன்

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் ஆகியோரின் நிச்சயதார்த்தம் இந்தியக் கலாசார முறையில் நடந்தது.

glenn-maxwell-goes-all-indian-in-engagement-to-vini-raman
glenn-maxwell-goes-all-indian-in-engagement-to-vini-raman

By

Published : Mar 17, 2020, 12:28 PM IST

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல். இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனும் மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னதாக மேக்ஸ்வெல், வினி ராமன் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இருவரும் அறிவித்தனர்.

மேக்ஸ்வெல் - வினி ராமன்

இந்நிலையில் மேக்ஸ்வெல் - வினி ராமன் ஆகியோரின் நிச்சயதார்த்தம் இந்தியக் கலாசார முறையில் நேற்று நடந்தது. அதுகுறித்து வினி ராமன் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், ''நேற்று எங்களின் நிச்சயதார்த்தம் கொண்டாடினோம். நான் எனது காதலன் மேக்ஸ்வெலுக்கு இந்திய கலாசரா முறையில் எப்படி திருமணம் நடக்கும் என்பதை டீசராக காண்பித்துள்ளேன். எங்களை சுற்றி சிறந்த மனிதர்கள் இருந்தது நல்ல அனுபவமாக இருந்தது'' என்றார்.

மேக்ஸ்வெல் - வினி ராமன்


இதையும் படிங்க:
'என் பேச்சை அவர் ரசித்துக் கேட்பார்' - திருமணம் வாழ்க்கை குறித்து குஷ்பு நெகிழ்ச்
சி

ABOUT THE AUTHOR

...view details