தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உள்ளரங்கு கிரிக்கெட் மைதானம்... கங்குலி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்! - CAB indoor facility

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் கட்டப்பட்ட வந்த உள்ளரங்கு கிரிக்கெட் மைதானப் பணிகள் முடிவடைந்துள்ளதாக, பிசிசிஐ தலைவர் கங்குலி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

ganguly-shares-pictures-of-upgraded-cab-indoor-facility
ganguly-shares-pictures-of-upgraded-cab-indoor-facility

By

Published : Mar 15, 2020, 4:55 PM IST

பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக உள்ளரங்கு கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வந்தது. அதன் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாக, பிசிசிஐ தலைவர் கங்குலி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்போடு சில புகைப்படங்களையும் கங்குலி வெளியிட்டுள்ளார். அதில், இந்த மாநிலத்தின் கலைநயத்துடன் உள்ளரங்கு கிரிக்கெட் மைதானம் உருவாகியுள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த உள்ளரங்கு கிரிக்கெட் மைதானத்தோடு உடல்பயிற்சி கூடம், நீச்சல் குளம் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா, இந்த மாத இறுதியில் நடக்கும் என பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார். இவர், முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மகனாவார். பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக, பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வெளிநாட்டு வீரர்கள் வேண்டும்... அடம்பிடிக்கும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details