தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கங்குலி - டிராவிட் பார்ட்னர்ஷிப் அப்போது மட்டுமல்ல, இப்போதும் முக்கியம்

பிசிசிஐ தலைவர் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் அப்போது மட்டுமல்ல இப்போதும் மிக முக்கியம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

ganguly-dravid-partnership-important-for-indian-cricket-says-laxman
ganguly-dravid-partnership-important-for-indian-cricket-says-laxman

By

Published : Jun 26, 2020, 7:45 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரர்களாக வலம்வந்தவர்கள் கங்குலி, டிராவிட். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எப்படி முன்னணி வீரர்களாக வலம்வந்தார்களோ, அதேபோல் இப்போது பிசிசிஐயின் முக்கியமான அங்கமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் பேசுகையில், '' பிசிசிஐ தலைவர் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் டிராவிட் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியம். இந்திய அணி அனைத்து வகையான போட்டிகளிலும் வெற்றிகரமாக இருக்க வேண்டுமென்றால், அவர்களின் ஒருங்கிணைப்பு முக்கியமானது.

கேப்டன், பிசிசிஐ தலைவர், என்ஐஏ தலைவர் ஆகியோர் ஒரே மனநிலையில் இருந்து இந்திய கிரிக்கெட் எதிர்காலத்தை வெற்றிகரமாக மாற்ற வேண்டும்'' என்றார்.

சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, டிராவிட் பற்றி பேசுகையில், '' எனது அறிமுகப் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த பின் 131 ரன்களில் ஆட்டமிழந்தேன். அதையடுத்து டெய்லண்டர்களுடன் டிராவிட் சிறப்பாக ஆடி 95 ரன்கள் எடுத்து ஆடிவந்தார். அப்போது டிராவிட் சதம் அடிப்பார் என்ற நம்பிக்கை அவரை உற்சாகப்படுத்துவதற்காக லார்ட்ஸ் பால்கனியில் வந்து நின்றேன். ஆனால் எதிர்பாராவிதமாக டிராவிட் 95 ரன்களில் ஆட்டமிழந்தார்'' என தங்களது நட்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'திருப்புமுனையாக அமைந்தது கபில்தேவின் கேட்ச்தான்' - 1983 ஃபைனல் குறித்து கீர்த்தி ஆசாத்

ABOUT THE AUTHOR

...view details