இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனை கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் பெரும் தோல்வி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சுக் கூட்டணியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிதறடித்தது இந்திய அணியின் மனஉறுதியைப் பாதித்துள்ளதாக விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகிறது.
அடுத்த இரு போட்டிகள் பட்டாஸாக இருக்கப்போகிறது : கங்குலி நம்பிக்கை! - பிசிசிஐ தலைவர் கங்குலி
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், அடுத்த இரு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், '' ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஆடவுள்ள அடுத்த இரண்டு போட்டிகள் பட்டாஸாக இருக்கபோகிறது. வலுவான இந்திய அணிக்கு, நேற்றைய நாள் சரியாக அமையவில்லை. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதே நிலையிலிருந்து மீண்டு தொடரினையும் வென்றுள்ளது. அதற்காக இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்துகள் '' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐசிசியின் டெஸ்ட், ஒருநாள் அணிகளுக்கான கேப்டன் இவரே...!