ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரன்களை கட்டுப்படுத்த முடியாத விரக்தியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 30 யார்டு சர்க்கிளில் அமைக்கப்பட்டிருந்த குறியீடுகளை உதைத்து தள்ளினார்.
இதனை கிரிக்கெட் பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது பும்ராவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.