இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர், உத்திர பிரதேச மாநில அமைச்சர் சேதன் சவுகான். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனை முடிவில், சவுகானுக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு கரோனா தொற்று உறுதி - சேதன் சவுகானுக்கு கரோனா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அரசியல்வாதியுமான சேதன் சவுகானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
former-cricketer-chetan-chauhan-tests-positive-for-covid-19-reports
மேலும் இத்தகவலை முன்னாள் இந்திய வீரர், ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், 'இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேதன் சவுகானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய எனது வாழ்த்துகள். மேலும் இந்த இரவானது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் அமித்தாப் பட்சன், சேதன் சவுகான் இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.