விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மாதத்தில் மூன்று போட்டிகள் அடங்கிய டி20, ஒருநாள் தொடரில் பங்கேற்கவிருந்தது. ஆனால், நிலையில் கரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டிருந்தது .
தள்ளி வைக்கப்பட்டு இருந்த இந்த தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், " இந்த தொடர் நடைபெற இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதனால் இந்த தொடர் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்று உடனடியாக கூற முடியாது.
இதுவரை இந்த தொடர் குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, வீரர்களின் பாதுகாப்புக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசாங்கம் பிறப்பிக்கும் கட்டளைகளுக்கும் பிசிசிஐ கட்டுப்படும்.
தொற்றுநோயைப் பொறுத்தவரையில் நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எனவே, சரியான நேரத்தில் இந்த தொடர் குறித்த முடிவு எடுக்கப்படும்" என்றார்.