கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் தலைமை செயல் அலுவலர் கேவிட் ராபர்ட்ஸ், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவேண்டுமென விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு சாத்தியமில்லை - கங்குலி! - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
கரோனா சூழ்நிலை காரணமாக ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பது சாத்தியமில்லாத ஒன்று என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராபர்ட்ஸின் விருப்பத்திற்கு பதிலளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 'தற்போது நிலவும் சூழலில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே தோன்றுகிறது. ஏனெனில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், மனதளவிலும், உடலளவிலும் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும். மேலும், தற்போது உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளபடி குறுகிய கால போட்டிகளில் விளையாடவே வீரர்களும் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வருகிற நம்பர் மாதத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் காரணத்தால், வீரர்களின் ஓய்வு குறுத்தும் தாம் யோசிக்க வேண்டியுள்ளதால், இத்தொடர் நடைபெற வாய்பில்லை என்றே தெரிகிறது' என்றும் தெரிவித்தார்.