உலகக்கோப்பைக்கு பின் நியூசிலாந்து அணி இங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையிலுள்ள காலேவில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் ஜீத் ராவல், டாம் லாதம், ரோஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், பி.ஜே.வாட்லிங், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, வில்லியம் சோமர்வில், ட்ரென்ட் போல்ட், அஜாஸ் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியில் லஹிரு திரிமன்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சயா, லசித் எம்புல்டேனியா, லக்மல், லஹிரு குமாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி பகுதி நேர முடிவுவில் 95 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நியூசிலாந்து அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் ராவல் 33 ரன்களும், லாதம் 30 ரன்களும் எடுத்தனர். கேப்டன் வில்லியம்சன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். டெய்லர் 27 ரன்களுடனும், நிக்கோலஸ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் தனஞ்சயா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.