கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரோஹித் சர்மாவுடன் இணைந்து யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் உரையாடும் நிகழ்ச்சியின்போது பேசிய யுவராஜ் சிங், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சாஹல் வெளியிட்ட டிக்டாக் வீடியோ குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசினார்.
அதில், சாஹல் சார்ந்திருக்கும் சாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் அக்காணொலி சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இதையடுத்து, ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர்வலரும், வழக்கறிஞருமான ராஜத் கல்சான் என்பவர் நேற்று (பிப்.14) ஹிசார் நகர காவல் நிலையத்தில், யுவராஜ் சிங் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், சாஹல் குறித்து சாதி ரீதியாகப் பேசிய யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.