2016ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம்வந்த ஆமிர், கடந்த வருடம் திடீரென டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்.
இவரது ஓய்வுக்கு பல கிரிக்கெட் வீரர்களால் பல காரணங்கள் கூறப்பட்டது. தற்போது இதுகுறித்து ஆமீர் மனம் திறந்துள்ளார்.
அதில், ''எனது ஓய்வு பற்றி ஒவ்வொருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஆனால் எனது உடல் பற்றி எனக்கு நன்றாக தெரியும். எனது உடல் அதிகப்படியான பழுவினை சுமப்பது போல் உணர்ந்தேன். அதனை சரியாக என்னால் நிர்வகிக்க முடியவில்லை. கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக தொடர வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு அது. அந்த முடிவால் எனது உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் அனைவருக்கும் தெரியவரும்.