நேற்று நமிபியா-பொட்ஸ்வனா இடையிலானா சர்வதேச டி-20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய நமிபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை விளாசியது. இதில் அந்த அணியின் ஜேபி கொட்ஸி 43 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்களை விளாசினார். இதில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
இவர் 43 பந்துகளில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் அடிக்கப்பட்ட நான்காவது அதிவேக சதமாக இது பதிவானது.